காணவில்லை அவளை

காணவில்லை அவளை!!
💗💗💗💗💗💗💗💗💗💗

அது ஓர் அமாவாசை இரவு !
மென்னொளி வீசும் -
என்
வெண்ணிலாவைக் காணவில்லை !

புள்ளிகளாய்க் கண்சிமிட்டும்
விண்மீன்கள் மீது -
மனம்
வெறுப்புமிழ்கிறது!

காரிருள் பொழியும்
வானத்தினூடே
புவியெல்லைத்
தாண்டியும்
தேடித் தொலைகிறேன்!

தலையில் முட்டுவதும்
காலில் தட்டுப்படுவதும்
நிழல் மறைத்த
நிலவென்பதை அறியாமலேயே !

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (19-Jul-23, 8:17 am)
சேர்த்தது : யாதுமறியான்
Tanglish : kaanavillai avalai
பார்வை : 63

மேலே