பிரிவு

தோழியரே!
விசும்புதனில் விளையாடித் திரியும்
விண்மீன்கள் நாம்
விசித்திரமான உறவு தெரியாத சூரியன்
விரட்டியடிக்க வீரமாய் கிழக்கில்.......
ஆனால்.... ஆனால்....
வீரமாய் எழுந்த சூரியனும்
வீழ்ந்து தான் ஆகனும் மேற்கில்,
விரண்டோடிய விண்மீன்கள் திரும்பவும்
விளையாடித் தான் ஆகனும்,நண்பியரே...
சொந்தங்களை சோகமாக்கும்
பிரிவு
அந்தப் பிரிவு எந்த
சொந்தங்களுக்கும்
சொந்தமில்லை.
உண்மை நட்புக்கு
பிரிவென்பது நிரந்தரமன்று! நிரந்தரமன்று!!!

எழுதியவர் : Zulfathul Shabnam (14-Oct-11, 7:52 pm)
பார்வை : 623

சிறந்த கவிதைகள்

மேலே