1980 களில் மேலக்கலங்கல் அம்மன் கோவில் திருவிழா

'80 களில் மேலக்கலங்கல் அம்மன் கோவில் திருவிழா..

அம்மனுக்கு படைப்பு சோறு
++++++++++++++++++++++

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்
(அதிகாரம்:ஈகை குறள் எண்:225)

கசாலமன் பாப்பையா விளக்கம்:

வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக் கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு அடுத்துத்தான் வலிமையாய் அமையும்.

முதல் திருவிழா நிகழ்வு : மற்ற மூன்று அம்மன்களான காளியம்மான் தம்புராட்டியம்மன்,வடக்கத்தியம்மன் ஊருக்கு வடக்கே வெளியே இருக்க. ஊருக்குள் குடியிருக்கும் வடகாசியம்மன் கோவிலில் பந்தல் அமைக்கப்பட்டு அம்மனுக்கு பால்,இளநீர்,சந்தனம்,குங்குமாம்,மஞ்சள்,விபூதி,பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நிகழ்த்தப்பட்டு.
.
அம்மனுக்கு அரிசி சாதம்,அவியல்,முருங்கைக் கீரை,பருப்பு,வாழைக்காய் கூட்டு ,அப்பளம்,புளிக் குழம்பு ஆகியவற்றை கலந்து அம்மனுக்கு படைப்பு சோறு போடப்படும்....

அம்மனுக்கு படைப்பு சோறு 1 கிலோ 2 கிலோ அரிசியில் அல்ல குறைந்தது 50 கிலோ அரிசியில் சாதம் வடிக்கப்பட்டு வேஷ்டியில் மலை போல் குவித்திருப்பார்கள்...

அம்மன் படைப்பு சோற்றை விழாவை நடத்தும் மறவர் இன மக்களுக்கு ஒரு துளி சிறு குழந்தைக்குக்கூட எடுக்க மாட்டார்கள் ..

படைப்பு சோறு யாருக்கு ?

அம்மன் படைப்பு சோற்றை பெரிய உருண்டையாக உருட்டப்பட்டு ஏழ்மையில் வாடும் துப்பரவுப் பணியாளர்கள் , சலவைத் தொழிலாளி,சிகை அலங்காரம் செய்பவர்கள் மற்றும் பூசை செய்பவர்களுக்கு உணவை ஊர் நாட்டமைகள் வழங்குவார்கள்..

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்

என்ற குறளுக்கினங்க..

ஊரின் முக்கிய நிகழ்வாக அம்மன் திருவிழா துவக்க நாளில்

தான் பசியோடு இருப்பினும் நம்மை நம்பி வந்தவர்களையும்..நம்மையே நம்பி இருப்பவர்களையும் பட்டினியால் தவிக்க விடக்கூடாது..என்பதற்காக எங்கள் முன்னோர்கள் வழிவகுத்த நடைமுறை ..

தொடரும்....

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (21-Jul-23, 6:04 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 22

சிறந்த கட்டுரைகள்

மேலே