1980 களில் மேலக்கலங்கல் அம்மன் கோவில் திருவிழா

'80 களில் மேலக்கலங்கல் அம்மன் கோவில் திருவிழா..

காப்பு கட்டுதல்
+++++++++++++

ஒரு காரியத்தை நாம் தொடங்குவதற்கு முன்பு அந்தக் காரியம் முடியும் வரையிலும் இடையூறுகள் ஏதும் ஏற்படாமல் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு செய்வதற்கு காப்பு கட்டுதல் என்று பெயர்.

நாம் செய்வது ஒரு நாள் பூஜையாகவும் இருக்கலாம் அல்லது பத்துநாள் பூஜையாகவும் இருக்கலாம். அதுமாதிரி செய்யக்கூடிய காரியங்களில் காப்பு கட்டிக் கொண்டால், ஊர் எல்லையைத் தாண்டிப் போகக் கூடாது. உபவாசம் இருக்கணும், பிரமசரிய நியமத்துடன் இருக்கணும் என்று சாஸ்த்ரம் சொல்கிறது. அம்மாதிரி நியமத்துடன் இருந்து மேற்கொண்டால், அந்தக் காப்பு நம்மைக் காப்பாற்றும்.

"கலாச்சாரம என்பது நம்மோடு அழிவதில்லை நம்மை அடுத்தும் தொடர்வதே"

நம் முன்னோர்கள் ஒரு வழிபாட்டு முறையை நமக்காக சொல்லிவிட்டு சென்றுள்ளார்கள் என்றால் அதற்க்கு பின்னால் பல ரகசியங்கள் அடங்கியிருக்கிறது.

பாரம்பரியமானது நம் குழந்தைகளுக்கு சொல்லித் தரப்படாமல் அப்படியே மறைந்து விடுகிறது.பாரம்பரியத்தை சொல்லிக்கொடுத்து வளர்க்கவும்..

ஆன்மீகரீதியாக வேப்பிலை, மாஇலை கட்டி உள்ள வீட்டுக்குள் கெட்ட சக்தியானது அண்டாது என்பது நம் நம்பிக்கை.

வேப்பிலை காற்றில் இருக்கும் கிருமிகளை தடுக்கும் கிருமி நாசினி. மாஇலை உடல் களைப்பை நீக்கும். சிறுபீளை நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.

வேப்ப மரத்திலிருந்து வேப்பிலையும்.மா மரத்திலிருந்து மாவிலையும் பறித்து சிறு சிறு கட்டுகளாக நீண்டதோர் கயிற்றில் கட்டி..

அவற்றை ஊரின் எல்லையான நுழைவு வாயல்களில் குறுக்கே உயரத்தில் கட்டப்படும்...

இப்படி கட்டிய பொங்கல் காப்பு என்று எங்கள் ஊரில் அழைப்பார்கள் ..இப்படிக் கட்டுவதால் வேப்பிலை வாசம் காற்றோடு கலந்து கிருமி நாசினியாக செயல்பட்டு எந்த ஒரு நோயும் திருவிழா துவங்கி முடியும் வரை ஊரில் உள்ளோர்க்கு வந்து விடக் கூடாது என்பதாலும்..

ஊரிலிருந்து வெளியூர் செல்ல தடையாகவும்..வெளியூர்க்காரர்கள் ஊருக்குள் வரை தடை விதிப்பதுமாகும்..அது ஏன்..?

நோய் பரவாதிருக்க அசம்பாவிதம் ஏதும் நடைபெறமால் இருக்கவே இந்த ஏற்பாடு

தொடரும்....

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (22-Jul-23, 6:10 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 57

மேலே