1980 களில் மேலக்கலங்கல் அம்மன் கோவில் திருவிழா

80 ' களில் மேலக்கலங்கல் அம்மன் கோவில் திருவிழா

திரைப்படம் :

அந்த காலகட்டத்தில் திருவிழாக்களிலும், பொருட்காட்சிகளிலும் திரை கட்டி படங்களை திரையிடுவது உண்டு.

முதல் ஏழு நாட்களும் 10 ஆம் நாள் இரவும் திரைப்படமும் ..8 வது திருநாள் அன்று கிராமிய வில்லிசையும் 9 வது நாள் கரகாட்டமும் ஆகிய 10 நாட்கள் திருவிழவாக எங்கள் ஊரின் அம்மன் கோவிலில் கொடை நடைபெறும்...

ஊர் பொது இடமான கச்சேரியெனும் கட்டிடத்தின் முன்பு செயல்படும்.. அதென்ன..கச்சேரி... புதுசா இருக்கேனு நீங்கள் யோசிக்கலாம்..

அதவாது ஊரை நிர்வாகிக்கவும் அதற்கு வருவாய் ஈட்டும் இடமுமாகும்..பஞ்சாயத்து என்பதை அன்றையக் கால கட்டத்தில் இவ்வாறு அழைத்திருக்கலாம்...

அந்தக் கட்டிடத்தின் முன்புதான் திரைப்படம் ,வில்லிசை,கரகாட்டம்,சாமியாட்டம் போன்ற நிகழ்வுகள் நடை பெறும்...

பெரும்பாலான திரைப்பட ஒளிபரப்பை எனது ஊர்க்கு சுரண்டையைச் சேர்ந்த முருகன் ஆடியோ சர்வீஸ் என்று ரெடியோ சர்வீஸ் செய்து கொண்டே ஊர் ஊர்க்கு ரீலும் அவர்தான் ஓட்டுவார்..

திருவிழா நாட்களில் இரவு 8 மணி ஆகி விட்டால் சினிமா தியேட்டரில் புதுப்படத்துக்கு எப்படி காத்திருப்பார்களோ அதே போல் முருகன் ரீல் பெட்டி கொண்டு வருவதை ஊரார் அனைவரும் எதிர் பார்த்து காத்திருப்போம்..

அவர் ரீல் பெட்டியை கொண்டு வந்ததும் ரீல் பெட்டி வந்திருச்சுனு சொல்லி சிறுவர் முதல் பெரியவர் வரை குஷி ஆகிடுவோம்..
அன்றயைய நாட்களில் 35 mm திரைதான் அந்த திரையை இரு புறமும் கம்பில் கட்டப்பட்டு திரையரங்க திரை போல் கட்டப்படும்....

இரு கம்பிலும் ஊசிக் குழாய்கள் முன்பும் பின்புறம் ஒன்றாக நான்கு குழாய்கள் கட்டப்படும் , அப்போது..இப்போது போன்று பெரிய பெரிய சதுர வடிவு ஸ்பீக்கரெல்லாம் அப்போது கிடையாது..

முதல் நாள் ஒரு பக்தி படமும் எம்ஜிஆர் படமும் போடுவார்கள்..அம்மன்,அகத்தியர் ,ஆடி வெள்ளி போன்ற படங்கள் ஒளிபரப்பப்படும் 1971 களிலே சினிமாஸ் கோப் படங்கள் வந்து விட்டாலும் ராஜ ராஜ சோழன்..திருவிளையாடல் போன்ற கலர் படங்களின் ரீல்கள் டிமான்டாக இருக்கும் ஆகையால் பக்தி படம் பழைய படமாக கருப்பு வெள்ளை படமாக போடுவார்கள்..அதுபோல்தான் எம்ஜிஆர் படமும் பெரும்பாலும் கருப்பு வெள்ளைதான்..

இரண்டாம் நாள் திருவிழா கார்த்திக் ரசிகர் மன்றம் சார்பாக கார்த்திக் படங்கள் ஒளிபரப்பப்படும்..அதன் பிறகு கமல் ஹாசன் ரசிகர்,விஜயகாந்த் ரசிகர்,டிஆர் ரசிகர்கள் அவர் அவர் ரசிகர் படங்களை ஒளிபரப்பு செய்வார்கள்

நடுநிலை நன்கொடையாளர்கள் மோகன்,பாக்யராஜ் ,சத்யராஜ் ,ராமராஜன் படங்களும் திரையில் ஒளிபரப்புவார்கள்..பெரும்பாலும் சோகப் பாடல்கள் அடங்கிய படங்கள்தான் அதிமாக காட்டப்படும்...

திரையில் பார்த்த கதைகளை சிறுவர்கள் பள்ளியிலும் பெருசுகள் ஊர் முக்கில் அமர்ந்தும் பார்த்த கருப்பு வெள்ளைப் படத்தைப் பற்றி கலர் கலரா ரீல் விட்டு மகிழ்வார்கள்...

தொடரும்....

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (23-Jul-23, 5:57 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 47

மேலே