நாம் செய்யும் பணி எல்லாம் அவன்கிட்ட பணியே
பார்ப்பவை எல்லாம் நல்லதாய் இருத்தல் வேண்டும்
கேட்பவை எல்லாம் நல்லனவாய் இருந்திட வேண்டும்
பேசுவதெல்லாம் நல்லனவாய் மொழிதல் வேண்டும்
உள்ளம் என்றும் எப்போதும் அவன் பாதம்
நினைத்தே செய்யும் பணி எல்லாம் அவன்
ஆர்த்த பணியே என்று வாழ்ந்தோ மானால்
துயர் ஒன்றும் நம்மை அணுகாவே