ஒருதலைக் காதல்
விண்ணோர் கண்டாலும் வியக்கும் அழகியவள்
பண்ணிசைக்கும் சதங்கை ஒலி அவள்பாதங்கள்
எண்ணிலா கற்பனைக்கு கொண்டு சேர்க்கும்
வண்டாற்கும் மலர் விழியாள் அவள்
என்மனதில் வந்து தங்கி விட்டாள்
என்செய்வேன் நான் கேட்டால் அவள்
மணாளனாய் ஏற்ப்பாளோ தெரியலையே