சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 14
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 14
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அம்பாள் சிவபெருமானிடம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிறப்பும் இறப்பும் இல்லாதப் பரம்பொருளை
பிரளயக் காலத்தில் அனைத்தையும் அழித்து
தன்னுள் ஒடுக்கி நிலையாக இருப்பவரே
தன்னுள் பாதியாக உறைந்தப் பெருமானே
அன்பாக அருட்ப் பெருஞ்சோதியின் ஒளியானவரே
இன்பமாக மங்களமாக எங்கும் நிறைந்தவரே
ஆனந்தத் தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கி
அழித்தால் காத்தல் படைத்தல் மறைத்தல்
அருளள்யெனும் ஐந்தொழிலுக்கும்
ஆரம்பமான ஓம்யெனும் மந்திரத்தை
உடுக்கையினால் எழுப்பி
உமையாளாகிய என்னையும் பிரமனையும் திருமாலையும் உருவாக்கியவரே
போற்றி ! போற்றி!! போற்றியென!!! வேண்டிய
பார்வதி தேவி சிவனை நோக்கி
பதுமன் சங்கன் நாகராசர்களுக்கும்
உமையாளாகிய எனக்கும் உலகாத்தாருக்கும் சந்தேகம் ஒன்று
உயர் ஆற்றல் மிகுந்தவர்
பெருமானே நீரா இல்லை திருமாலயென வினவினால்
பெருமானோ புன்னகைத்து பார்வதி தேவியே
புன்னைவனம் சென்று தவமிரு உனக்கு
புரிய வைத்திட காட்சி தருவேன்
என்று சிவன் சொல்ல அம்பாள்
எல்லைக்கு வருகிறாள் தவமிருக்க...
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்