நன்றி சொல்வோம் இறைவனுக்கு

ஆசானாக இருந்து
அறிவுரை கூறி வழி நடத்துகின்றீர்
அன்பிற்கு மிகவும் நன்றி...
தந்தையைப்போல
சில நேரங்களில் கண்டிக்கின்றீர்
பாசத்திற்கு மிகவும் நன்றி...
திட்டித்தீர்த்து அல்ல
தாயைப் போல
தட்டிக் கொடுத்து வேலை வாங்குகின்றீர்
தாராளமான நன்றிகள்....
எதார்தத்தைப் புரிய வைத்து
அர்த்தமுள்ள வாழ்கை வாழ கை கொடுக்கின்றீர்.....
சுற்றம் குறை கூறினாலும்
சற்றும் குறை கூறாதே என்று கற்றுக்கொடுக்கின்றீர்....
நிறைவான நன்றிகள்....
வாழ்க்கையில் பயணிக்கும் காலங்கள் குறைவு
ஆனால் அது கற்றுக்கொடுக்கும் பாடங்கள் அதிகம்....
வாழ்க்கையை வாழ்வோம் சிறப்பாக...
நம்மைக் காக்கும் இறைவனின் நல்லாசியுடன்...

எழுதியவர் : முனைவர் ஆ.கிருஷ்ணவேணி (31-Jul-23, 7:55 pm)
பார்வை : 179

மேலே