பொய்யும் , மெய்யும்

தாம் யாரென்று காட்டிக்கொள்ள எத்தனையோ
சித்தர்கள் நித்தம் நடமாடும் பூமி பாரதம்
இங்கு கடவுள் இல்லை என்று அலையும்
கூட்டம் கண்ணிருந்தும் குருடராம் கூட்டமே
பகட்டு பொய்ச்சாமியார்கள் பின்னே அலைகிறார்
இங்கு மக்கள் பணம் வாரித்தந்து
இல்லா உறவுகள் நாடி பொல்லா பொருள் சேர்க்க
அய்யகோ ஏனோ மாந்தர் சன்மார்க்கநெறி
தேட தயங்குகிறார் புரியலையே பொய்யில்
மறைந்திருப்பது பித்தலாட்டம் மெய்யில்
நாம் காண்பதெல்லாம் என்றும் பேரின்பம்தானே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (1-Aug-23, 3:17 am)
பார்வை : 70

மேலே