கொசுக்கள்
கொசுக்கள்
அங்கும் இங்குமாய்
வாகனங்கள்
சென்று கொண்டிருந்த
சாலையில்
ஆங்காங்கே
மழையோ மற்றவையோ
செய்து விட்ட
சிறு குளங்கள்
அவைகள் குட்டைகளாய்
தேங்கிய
நீர் நிலைகள்
அவற்றின் மேல்
அவசரமாய் ஆயிரம்
ஆயிரம் வீடுகள்
அதற்குள் இருப்பது
முட்டைகளோ
லார்வாக்களோ..!
வாகனம் குட்டையில்
இறங்கி மேலேற
குபீரென்று கூட்டமாய்
பறந்து மீண்டும்
அதன் மேல் அடை
காக்கும் கொசுக்கள்

