பழைய ராகம்புதிய பாடல்

பழைய ராகம்...புதிய பாடல்

பாடல் : தங்கத் தாயரை மகளே
படம் : மின்சாரக் கனவு

பல்லவி
;;;;;;;;;;;;;;;;;
மங்களத் தாரகைப் பெண்ணே தா மடியே/
சக்தி குறையுது கண்ணே தா மடியே/
துள்ளும் மனமும் துள்ளும்/
பெரு அன்பில் மாறுது சோர்வும்/
அவை இல்லாமால் மறையுது பண்பாலே/
(மங்களத் தாரகைப் பெண்ணே)

சரணம் : 1

வடித்த சிலையில் கவர்ந்து இழுக்கும் கலைதானே/
உன் இடுப்பு வரியில் பசையால் கொண்டு சேர்ந்தேனே/
விரித்த இமையில் பேசிடும் எந்தன் தாய்மொழியே/
என் திறக்க இதயக் கூட்டுக்குள்ளே
சுவாசத்தில் தான் கலந்தவளே/
கூந்தலுக்கு வெளியே மாலை கொண்டு பதிக்க/
அந்த முடி ஒட்டு வாசம் மூக்கைத் தொலைக்க
சேரட்டுமா கொள்ளை அடிக்க/

சரணம் :2

வெடிக்கும் நிலங்கள் உயிரைத் திண்ணும் கோடைகாலம்/
நனைக்கும் வேர்வை உடலில் சுரக்கும் கோடைகாலம்/
புதைந்த விதைகள் தளிரத தேடும் கோடைகாலம்/
நிறைந்திருக்கும் நீரையெல்லாம்
உரிந்து இருக்கும் கோடைகாலம்/

தவம் இருக்கும் கண்ணே திறக்காதென் இமைகள்/
திறந்தாலும் காண அடங்காது ஓசை/
தோன்றுமே மனதின் ஆசை/
(மங்களத் தாரகைப் பெண்ண)

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (8-Aug-23, 5:37 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 51

மேலே