உழவனோடு உறவாடு

உழவனோடு உறவாடு
###################

ஆசையில்லா புத்தனவன்
அகிலத்திற்க்கும் உணவுதரும்/
அரையாடை அணியும்
ஆண்டவனின் மருரூபனவன்/

ஏற்றம் இறைக்கும்
ஏழைகளைப் பாரீர் !
கதிரவன் கக்கிடும்
கதிரால் சிந்தும் /

வியர்வையில் குளித்து
வாழ்ந்திடுவான் சேற்றினிலே /
சுழலும் பூமியைப்போல்
சுயநலம் அவனிக்கில்லை /

மண்ணைப் பசுமையாக்கும்
மழைதரும் வான்போல் /
உயர்ந்தவன் உண்ண
உழவன் உழைக்கிறான் /

பாட்டாளியைச் சுரண்டியே
பயணடைகிறான் இடைத்தரகனும் /
பாடுபட்ட விவசாயி
பரிதவிக்கிறான் பசியிலே /

படைச்சவனும் விட்டான்
பாடுபடுபவனை வறுமையிலே /
பதவியில் இருப்பவனும்
படுத்துறான் சட்டத்தாலே /

உழவுக்கும் மிஞ்சிய
உயர்ந்தத் தொழிலுமில்லை /
உயர்வுக்கு ஒருபோதும்
உழவனுக்கு வழியுமில்லை /

உழவரோடு உறவாடுவோம்
உயர்நிலையில் உயர்த்திடுவோம் /
அவனின்றி உயிர்களில்லை
அகிலத்தில் உணர்திடுவோம் /

ஏட்டுச் சுரைக்காய்
கறிக்கும் உதவாது /
பணமும் வயிற்றுப்
பசியைத் தீராது /

விளை நிலத்தில்
வீட்டைக் கட்டுவதை /
நிறுத்தவிடில் கையேந்தி
நின்றிடுவோம் உணவுக்கு /

இந்நிலை வராது
இயற்கையையும் விவசாயத்தையும்/
படித்தவரும் பதவிவகிப்போரும்
புரிந்தே காத்திடுனும் /

ஆராய்ச்சியும் சட்டமும்
அறிவியல் வளச்சியும் /
விவசாயம் வளரவே
விஞ்ஞானம் செய்திடனும் /

நாடும் உயரும்
வயலும் உயர்ந்தால் /

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (8-Aug-23, 5:31 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 131

மேலே