இயற்கைஇறைவன்மனிதன்

நம்மைச் சூழ்ந்த இயற்கையில்
நாம் காணும் அத்தனையும்
அதிசயத்தில் ஆழ்த்தும் பெரும்
கண்கொளா காட்சிகள்தான்
அதைக் கண்டு ரசிக்கும்
கண்களுக்கு அதில் காணும்
இறைவனைக் கண்டு ரசித்து
வணங்கத் தெரியலையே ஏன் ?
'காக்கைச் சிறகினிலே நந்தலாலா'
..........கருமை நிறம் கண்டான் பாரதி
'தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா
நினைத் தீண்டும் இன்பம் கண்டேன்'
என்றான் இயற்கையில் இறைவனைக்
கண்டு மகிழ்ந்து .......
'அழகு பார்ப்பவர் பார்வைக்குள்' என்றான்
ஒரு கவிஞன்......கீட்ஸ்
'அவனைப்' பார்த்திட கண்கள் தந்தும்
நாம் பார்க்கவில்லை என்றால்
அது யார் குற்றம்"?
கண்களால் காதலியின் அழகை ரசிக்கும்
மனிதன்'காதல்' என்ற வார்த்தைக்குள்
கட்டுண்டு கிடைக்கும் இறைவனைக்
காணாத தெரியலையே ஏன் ? ஏன்?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (1-Aug-23, 6:40 pm)
பார்வை : 39

மேலே