அனுபவம்

காலை கண் விழித்தேன்
விழி மூடி யோசித்தேன்
கடமை அழைத்தது என்னை
பம்பரமாக சுழன்று என்
தினசரி உழைப்பை ஆரம்பித்தேன்....

மனதில் எண்ணம் ஓடியது
இன்றைய சூழல் மாறாமல்
சுமூகமாக எல்லாம் நிறைவு
அடைய மனம் வேண்டியது
இறைவனை.....

முடிந்தது வேலை, அனைத்தையும்
சரிபார்த்து மகிழ்ந்தேன் மனதில்,
கொண்டவன் வந்து குறை
கூற இயலாது இன்று
எண்ணமே இனித்தது இயல்பாய்....

மனதின் அமைதியும், உழைப்பின்
களைப்புமிக தலை சாய்தேன்
இருக்கையில் இயல்பாக இமை
சொருகியது ஆனந்த உறக்கத்தில்
ஆழ்ந்தேன் எனை யறியாமல்....

பூகம்பம் வெடித்தது, விதிர்த்து
கண் விழித்தேன் முகத்தில்
கொதிநீர் கொட்டிய அனுபவம் அமைதியான உறக்கம் மாறி
சடுதியில் மனதில் தீ
பிழம்பை உணர்ந்தேன்....

கொண்டவன் குற்றம் சாட்டினான்
பட்டபகலில் குடும்ப பெண்
உறக்கம் கொண்டால் குடும்பம்
விடியுமா...? போக்கிடம் அற்ற
பெண்டிர்க்கு மனதிலும் வலி
உணரும் உரிமை இல்லை....

மனதில் உருவகித்த காட்ச்சி
ஒன்று, நிதர்சனமோ அதற்கு
முற்றிலும் தலை கீழாக...!!?
மனதின் வலி ஆற்ற
அரை வினாடி விட்டு
மீண்டும் முயற்சி தொடங்கும்....

நித்தம் நித்தம் புது புது
காரணம் கற்பிக்கப் படும்,
எங்கள் முயற்சியும் தொடரும்
விடியுமா எங்கள் பொழுது....?
நிதர்சனம் தலை கீழாகுமா
நிரந்தரமாக.....?


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (4-Aug-23, 9:45 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : anupavam
பார்வை : 74

மேலே