குழந்தை வளர்ப்பு

இம்மண்ணில் கால்
பதிக்கும் வேளையில்
ஒவ்வொரு குழந்தையும்
வைரப் பூக்கள் தான்..

பட்டை தீட்டும்
விதத்தில் தான்
சாதாரண கற்கள்
விலை மதிப்பில்லாத
வைரமாக ஜொலிக்கும்.....

அவையே,

நாம் வளர்க்கும்
விதம்தான் நிச்சயிக்கும்
நாளை சமூகத்தால்
மதிக்கப் படுவார்களா - (அ)
மிதிக்கப் படுவார்களா .......

அகிலம் போற்றும்
மகவை ஈன்றவள்
மட்டு மல்லாது
அகிலம் போற்றும்
மகவை பேணியவளும்
சிறப்புடையவள் தான்....!!!

மற்றவர் நலனை
கருத்தில் கொண்டு
செய்யும் செயல்
யாவும் தன்னிச்சையாக
குழந்தை நன்முறையில்
வளர துணைநிற்கும்....

சான்றோர் நலனை
கருத்தில் கொள்ளும்
ஓர்உயிர், மற்றவர்க்கு
ஒருபோதும் துன்பம்
விளை விக்காது
என்பது திண்ணம்...!!!


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (4-Aug-23, 9:41 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : kuzhanthai valarpu
பார்வை : 49

மேலே