சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 22

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 22
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புன்னைவனம் கோவில் நகரமாக
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

காவற்பறையன் ஒடோடி வந்து
கண்டக் காட்சியை மன்னரிடம் சொல்ல
புன்னைவனத் தோற்றத்திற்கு புறப்பட்டேன் மன்னன்
புற்றில் நாகம் சூல லிங்கம் கண்டு

உடல் சிலிர்த்து
ஊமையாக நின்றான்
அசரீரி ஒலி கேட்டது
ஆலயம் அமைத்து
இவ்விடத்தில் வழிபடு
அவ்விடம்(மதுரைக்கு) வர வேண்டுமென ஒலித்தது

பூ பூத்துச் சிரித்தத் தோட்டம்
பறவைகள் கூடி வாழ்ந்து
பாடிப் பறந்தத் தோட்டம்
பார்வதி தேவியும்
பெரிய முனிவர்கள்
பசி மறந்து தவமிருந்த தோட்டம்
விலங்கினங்கள் வேட்டையாடி
விளையாடியத் தோட்டம்
ஐந்து ஏக்கர் கொண்ட
அழகியத் தோட்டத்தை அழித்தான்

தாமிரபரணியில் புனித மண்ணெடுத்து
தீர்த்தமாகக் குற்றால அருவியில் தண்ணீர் எடுத்து
துறவிகள் மன்னர்கள்
பூஜைகள் செய்து
ஆனையூர் மலையில்
அடுக்கானக் கற்களை
யானை மீது கொண்டு வர

ஆகாயம் பூமி
அனைத்தையும் படைத்த
கடவுளைப் பாறைக்
கற்களை உளியால்
கலை நயமிக்க
சிலையாகப் படைக்கும்
சிற்பி உமா சிவாச்சாரியார்
தலைமையேற்க நயமுடன்
கலைநயமிக்க கோபுரத்தைக்
கை வண்ணத்தில்
125 அடி உயரத்தில்
9 நிலை கொண்டு
நிமிரச் செய்து .....

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (6-Aug-23, 5:32 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 17

மேலே