பட்டுச் சேலைபகல் நிலாவே
குவிந்த மொட்டுப்போல் மெல்லிதழ்
திறக்கும் புத்தகம்போல் புன்னகை
தேன்போல் சொட்டுதோ காதலை
பட்டுச் சேலைபகல் நிலாவே
மொட்டுப்போல் மெல்லிதழ் மெல்லத் திறந்திட
பட்டுச்சே லையில் பகல்நிலா புன்னகையே
சொட்டுவாயா காதலை சொல்
திறந்திடும் புத்தகம்போல் புன்னகை ஏந்தி
உறவுக்கு நீபுதிதாய் உன்னர்த்தம் சொல்வாய்
மறந்திடத் தான்முடியு மா
சொட்டுதோ தேன்போலக் காதலை மெல்லிதழ்
பட்டுச்சே லைப்பால் நிலா

