சொக்கன் சொக்கியுமே இணைந்தேபூங் காதலிலே
குறைநிலவும் பாராய் வானில்
பிறைவடிவில் என்ன அழகு
இறைவனுக்குச் சடையில் அழகு
இறைவிக்கும் சடையில் அழகு
திக்கு நான்கில் கோபுரம் துலங்கும்
மிக்க மாமதுரை பாண்டியன் நகரினிலே
சொக்கனுடன் சொக்கி இணைந்து காதலில்
தக்க மணக்கோலத் தில்நின்றார் அழகினிலே
திக்கு நாலிலுமே கோபுரம்தான் துலங்கிடுமே
மிக்க மாமதுரை பாண்டியனின் நகரினிலே
சொக்கன் சொக்கியுமே இணைந்தேபூங் காதலிலே
தக்க மணக்கோலத் தில்நின்றார் அழகினிலே
நாக்கை அடக்கிடுவாய் முத்தப்பா
போக்கை மாற்றிடுவாய் முத்தப்பா
யாக்கை நிலையாது முத்தப்பா
வாக்கை சிவமாக்கு முத்தப்பா