தமிழுக்கழகு எதுகையும் மோனையும் --- கலித்துறை
தமிழுக்கழகு எதுகையும் மோனையும் ---கலித்துறை
*****
(கலித்துறை)
( புளிமா /விளம் /விளம்/விளம்/புளிமா)
மதுரை கண்டநம் மாமொழி செம்மொழி
---தமிழே !
அதற்கு யாப்பொடு அருகிடும் சீர்களே
---அழகு ;
எதுகைப் பதிவுடன் ஏற்றிடும் கவிநயம்
---அழகு ;
புதுமை யாயினும் பொழிந்திடு மோனையு
---மழகே !
****