கருத்தினையும் நான்தருவேன் காட்டிடுவா யுன்திறமை - தரவு கொச்சகக் கலிப்பா

தரவு கொச்சகக் கலிப்பா
(1, 3 சீர்களில் மோனை)

உருப்படியாய்க் கலிவிருத்த மொன்றெழுத
..மாட்டாயா?
கருத்தினையும் நான்தருவேன் காட்டிடுவா
..யுன்திறமை!
தெரிந்தபொருட் டனைவைத்துத் தெய்வமதைப்
..போற்றிடுவாய்;
அரவணிந்தோன் தனைப்பணிந்தே அருள்விருத்த
..மெழுதுவயே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Aug-23, 4:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே