நீலமாலை உரைத்த மகிழ்ச்சிச் செய்தி - கலிவிருத்தம்

கீழேயுள்ள வாய்பாட்டின்படி இறைவனைப் பற்றி, இயற்கையைப் பற்றி ஓர் கலிவிருத்தம் எழுதுங்களேன்.

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

வடங்களும் குழைகளும் வான வில்லிட
தொடர்ந்தபூங் கலைகளும் குழலும் சோர்தர
நுடங்கிய மின்னென நொய்தின் எய்தினாள்
நெடுந்தடங் கிடந்தகண் நீல மாலையே! 56

பொருளுரை:

பெரிய தடாகத்தில் கிடந்த குவளை போன்ற கண்களையுடைய நீலமாலை என்பவள் தன் கழுத்தில் பூண்ட ஆரங்களும், காதணியான குழைகளும் வானவில்லைப் போலப் பலநிற ஒளிகளை வீசவும், உடுத்த உடையும் மலரணிந்த கூந்தலும் அவிழ்ந்து சரியவும் துவண்ட மின்னல் போல விரைவாக ஓடி வந்தாள்.

சீதைக்குத் திருமணம் நடக்குமாறு இராமன் வில் முறித்த செய்தியை விரைவில் தெரிவிக்க வேண்டுமென்ற ஆர்வத்தோடு சீதை இருக்குமிடம் வந்தாள் என்பது!

தோழியின் பெயர் நீலமாலை; வானவில் இடுதல் – இந்திரவில்லின் தன்மையவாய்ப் பலநில ஒளி வீசுதல்!

எழுதியவர் : கம்பர் (11-Aug-23, 10:54 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

மேலே