பற்றினேன் உன்னடி பற்றதும் அகலவே --- நிலைமண்டில ஆசிரியப்பா
பற்றினேன் உன்னடி பற்றதும் அகலவே
********
(நிலைமண்டில ஆசிரியப்பா)
உள்ளத்(து) இருப்பன உதிர்த்திட வழியிலை ;
கள்ள மனத்துக் கயவனோ இவனிலை ;
புகழ்பெற செயல்கள் புரிந்திட மனமிலை ;
புகலிடம் யாதென புலம்பியே தவித்தேன் ;
கொற்றவை உமையுடன் கொஞ்சிடும் பரமனே
பற்றினேன் உன்னடி பற்றதும் அகலவே !
*********
(ஆறு அடிகள் /ஈரசைச் சீர்கள்/அடிக்கு 4 சீர்கள்
இரண்டடிக்கு ஒரு எதுகை/1 மற்றும் 3 ல்
பொழிப்பு மோனை)