பாம்புக்கு மட்டும் சட்டை
நேரிசை வெண்பா
பாம்பு தவிறயிங்குப் பார்மிருகம் ஏதுமே
ஓம்பி உடுத்தா உடையதை -- காம்புமறை
மாட்டி அழகினை மார்தட்டி போட்டிக்கு
காட்டி நடைசெய்யாப் போ
மானுடன் மயில்குயில் புலியுடன் சிறுத்தை
ஆவுடன் நெடுவானை கடுவன் பூனை
காட்டுவாழ் கரடி காட்டெருமை கடல்வாழ்
நீரினமும் பறவை ஏதுமே உடலை
மறைக்க ஆடையே கிடையாது
மனிதரும் கலர்கலர் உடைத்தேடு வதேனோ
.....