ஆதித்ய வர்ணா

19.08.2023

ஆதித்ய வர்ணா... நீ
மணிகண்டன்.. பிரேமா
அவர்களுக்கு வசந்தமாய்
வந்த அன்பு புதல்வி..
உன் அறிவு ஆற்றலால்
உலகை ஆளப்போகும் தலைவி

தியாகராஜன்.. சரோஜா
சரவணன்.. ரெங்கம்மா
தாத்தாக்கள் ஆச்சிகள்
உனக்கு அமைந்திருக்க..
வானமும் உனக்கு வசப்படும்
வாழ்வில் என்றும்
வெற்றிகள் சுற்றி வரும்..

பிரியமான வர்ணா...
பிறரை வெல்ல வேண்டும்
என்பதில்லை நீ...
அழகிய திட்டமிடலில்
அற்புத நட்புத்தளம் கொண்டு
உன்னை நீயே வென்று கொண்டிரு...

வரலாற்றில் இடம் பிடிக்க வாழ
வேண்டும் என்பதில்லை... உன்னை
உனக்குப் பிடிக்க வாழ்ந்திரு...
வரலாறும் உனக்கு இடம் கொடுக்கும்...

உன் ஒரு வயதில்
உன்னை வாழ்த்துகிறேன்
ஒரு புதிய நூறாண்டு
உனதானது... அது
இதுவரை யாரும் காணாதது...
அன்பெனும் சந்தனத் தென்றல் வீசும்
அழகிய நந்தவனம் அது...

அதில் வாழ்வின் பயணமெங்கும்
வசந்தங்கள் வரமாகும்...
வளங்கள் வசமாகும்...

ஆதித்ய வர்ணா..
உன் ரோஜா முகத்தில்
எப்போதும் மல்லிகை பூஞ்சிரிப்பு
அது கார்த்திகை நட்சத்திரம்
தந்த வனப்பு
கோகுலாஷ்டமி தந்த சிறப்பு..

ஆதித்ய வர்ணா...
உலகம் உந்தன் கையில்...
வசந்த வாழ்த்துகள்... இனிய
பிறந்தநாள் வாழ்த்துகள்...

அன்புடன்...
ஆர்.சுந்தரராஜன்.
💐🌹👏👍🎂🍫❤

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (20-Aug-23, 2:23 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 76

மேலே