திருநெல்வேலி அலும்னி

19.08.௨௦௨௯

அமைப்பியல் பிரிவு
லிமிட் ஸ்டேட் மெத்தட்
டிசைன் ஆயுதம் கொண்டு
ஷியர் ஃபோர்ஸ்... டார்ஷன்
பெண்டிங் மொமன்ட்... ஸ்ட்ரக்ச்சுரல்
அனாலிசிஸ் கேடயம் கொண்டு
எங்களை இந்த உலகத்தை
ஜெயிக்க வைத்தது திருநெல்வேலி
அரசு பொறியியல் கல்லூரி..

ஆயிரத்து தொள்ளாயிரத்து
எண்பத்து இரண்டு
நாங்கள் திருநெல்வேலி அரசு
பொறியியல் கல்லூரியில்
பொறியியல் பயில சேர்ந்த ஆண்டு

அப்போது இக்கல்லூரி கட்டி
முடிக்கப்பட்ட கல்லூரி அல்ல
கட்டிக் கொண்டிருக்கப்பட்ட கல்லூரி

அதனால் தான் இக்கல்லூரியில்
பயின்ற எனது நண்பன்
குமார்.. அவன் துணையுடன்
இன்னொரு கல்லூரியை
நான் கட்டி முடிக்க முடிந்தது..

பதினோரு அடிக்கு பதினோரு அடி
இது நான் பதினோரு வயது
வரை வாழ்ந்த ஓலைக்
குடிசையின் சதுர அடி...

எண்பது அடிக்கு ஐம்பது அடி
இது நான் தற்போது
வாழ்ந்து வரும் வீட்டின் சதுர அடி..

இதற்குக் காரணம் நான்
திருநெல்வேலி அரசு பொறியியற்
கல்லூரியில் பெற்ற கல்வி..

நான் கற்ற பள்ளிகளில் பிறர்
எழுதிக் கொடுத்தே மேடைகளில்
பேசி எனக்குப் பழக்கம்..

நானே தயார் செய்து
ரூரல் சேனிடேஷன் என்னும்
தலைப்பில் செமினார் எடுக்க
வைத்தது இந்த கல்லூரி
அதற்கு ஆணையிட்டது எங்கள்
பேராசிரியை மங்கையர்க்கரசி..

இருபத்தி நான்கு மணி நேரமும்
பூமி தூங்குவதில்லை..
சுற்றிக் கொண்டே இருக்கிறது
அதைத்தான் நாங்கள்
எங்கள் நண்பர்களுடன்
எண்பத்தி ரெண்டு
எண்பத்தி ஆறுகளில் செய்தோம்..
வருஷம் முழுமையும் நட்பு
வசந்தங்களோடு வாழ்ந்தோம்

நண்பர்கள் எங்களுக்கு என்று
எந்த மதமும் இல்லை
சில நேரங்களில் சாதிகளால்
பிளவுபட்டுக் கொண்டிருந்தோம்..
அது மைக் மோகன்
ரசிகர்கள் சாதி..
நடிப்பு அரசன் கமலஹாசன்
ரசிகர்கள் ஜாதி...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
ரசிகர்கள் சாதி...

கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட
இந்த நாற்பத்தி இரண்டு
ஆண்டு காலத்தில் கல்லூரிக்கு
மிக அருகில் வீடு கட்டி வாழும் நபர்
அது நானாகத்தான் இருக்கும்..
அதில் எப்போதும் ஒரு கர்வம்
எனக்குள் இருக்கும்...

எனது வீடு என்.ஜி.ஓ
"பி" காலனி உதயா நகர்..
ஒரு குளத்தைத் தாண்டினால்
என் வீடு வரும்..
அரசு பொறியியற் கல்லூரி
என் வீட்டு மாடியிலிருந்து
பார்த்தால் தெரியும்..

பள்ளிகள் படிக்கும் போது
சொந்தமாக சைக்கிள்
எனக்கு இருந்ததில்லை...
ஆனால் இன்று நான் நான்கு சக்கர
வாகனத்தில் பயணிக்கிறேன்..

1982ல் 17 வயது எனக்கு.. நான்
அப்போதுபொறியியல் கல்லூரியில்
புதிதாய் சேர்ந்த மாணவன்
1989ல் 25 வயது எனக்கு
அப்போது நான் ஒரு பாலிடெக்னிக்
கல்லூரியின் முதல்வர்..
கல்லூரியில் சேர்ந்த ஏழு ஆண்டில்
கல்லூரி முடித்த மூன்று ஆண்டில்
நான் ஒரு கல்லூரி முதல்வர் ஆனேன்..
அது அருள்மிகு செந்திலாண்டவர்
பாலிடெக்னிக் கல்லூரி
அதற்கு காரணம் திருநெல்வேலி
அரசு பொறியியல் கல்லூரி..

இந்திய தேசம் மட்டுமல்ல
கத்தார்.. ஓமன்.. சவுதி அரேபியா..
அல்ஜீரியா.. என நான்கு நாடுகள்
ஐந்து நிறுவனங்கள்
ஆறு புராஜெக்ட்கள்
என்னை பணி புரிய வைத்தது
அதற்குரிய தகுதியை
கொடுத்தது திருநெல்வேலி
அரசு பொறியியல் கல்லூரி..

பேராசிரியர்கள் சண்முகம்
நரசிம்மன்.. டாக்டர் சிங்கராஜ்..
சுப்பிரமணிய பிள்ளை..
ராமமூர்த்தி.. டாக்டர் சேகர்
மங்கையர்க்கரசி..
பழனிச்சாமி.. நவநீதகிருஷ்ணன்
டாக்டர் ராஜாராம்.. ஐசக்...
செல்லையா.. இளங்கோவன்
இவர்கள் எல்லாம் எங்களுக்கு
ஆசான்கள் மட்டுமல்ல எங்களை
வாழ வைக்கும் தெய்வங்கள்..

மனம் தளரும்போது மாத்திரைகளை
நான் நாடுவதில்லை..
நண்பர்களை நாடுவேன்
அவர்களால் தான் சைட் எஃபெக்ட்
இல்லாமல் வைத்தியம் தர முடியும்

இன்று என் இனிய நண்பர்கள்
அவர்கள் அருள்தாஸ்.. ராம்குமார்..
காளிராஜ்.. இப்ராஹிம் ஷா..
சங்கர சுப்பிரமணியன்
இங்கே வந்திருக்கின்றார்கள்

தெற்கு என்பது திசை அல்ல..
அது எனக்கு கோயில்..
ஏனெனில் நான் வசிக்கும்
வீட்டின் தெற்கே ஒன்றரைக்
கிலோ மீட்டர் தூரத்தில்
நான் படித்த அரசு
பொறியியல் கல்லூரி இருப்பதால்

எல்லோருக்கும் இருக்கும்..
வாழ்ந்து முடிந்து சொர்க்கம்
செல்ல விருப்பம்...
அப்படி நான் சொர்க்கமே
சென்றாலும் எனக்கு
திரும்பவும் திருநெல்வேலி
அரசு பொறியியல் கல்லூரியில்
படிக்க இருக்கும் விருப்பம்...

நன்றி வணக்கம்..

அன்புடன்...
ஆர். சுந்தரராஜன்.

🪷👍🌹😍

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (20-Aug-23, 2:13 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 74

மேலே