இன்பாக்ஸ் கேள்விகள்

இன்பாக்ஸ் கேள்விகள்

பயங்கரமான கேள்விதான்

//வேண்டாம் என்று விலகி வந்தபின் விரும்பி தொடர்பு கொள்பவர்களை என்ன செய்வது. அவர்களின் நடத்தை காரணமாக//

Dear

எல்லாரும் எதுக்கோ சொல்றதைப்போல
கல்யாணம் பண்ணிட்டா காதல் வராதுன்னு டயலாக் எல்லாம் பேசவிரும்பலை. காதல் காதல்தான்
நல்லக் காதல் கள்ளக்காதல் ன்னு எதுவும் இல்லை.

அந்தக் காதல் ஒரு பெண்ணுக்கோ ஆணுக்கோ ஏன் வருகிறது என்பதுதான்
பெரியக் கேள்வி. ஆணுக்கு வந்தால் அதை நியாயப்படுத்தவே முனைகிறான்.
பெண்ணிற்கு வந்தால் அதை வேறுவிதமாக மாற்றிவிடுகிறார்கள்

இப்படிப்பட்ட சமூகம் ஒரு அசட்டு சமூகம்தான் என்று சொல்வதைவிட
வேற என்ன இருக்கு.

பெரும்பாலும் ஆண்களே பெண்மையை உணர்ந்து செயல்படுங்கள் என்றே கேட்டுக் கொள்கிறேன்.

முதலில்

உங்களை அருகி வருகிறவர்களுடையத் தேவை என்ன என்பதைத் தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள்
உடற்தேவை உடையவர்கள் பணத்தேவை உடையவர்களாகி இருப்பின்
அந்த உறவு உங்கள் ஒருவரிடமே அவர்களுக்கு முடிந்து போய்விடாது .

நல்ல நட்பும் நல்ல அன்பும் அதற்கெல்லாம் அப்பாற்ப்பட்டதே ஆகும்.

எந்த ஒரு உறவும் நன்றாக இருக்கும்
குடும்ப உறவிற்குள் விரிசலை உண்டு செய்யும் என்றால் அதை encourage செய்வதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

பிரியங்கள் நேசம் காதல் இப்படி பலப்பட்ட விஷயங்கள் நம் வாழ்வைக் கடக்கலாம்

எல்லாமே சொற்பநாட்களுக்கே சந்தோஷங்களை அள்ளிக் கொடுத்து
கடந்து போகும் அற்ப விஷயங்கள்.

ஆதலால் ஏற்றுக் கொள்ளவேண்டாம்

Don't complicate your family life yourselves.

தற்போதைய வாழ்க்கை சரியில்லை என்றாலோ இல்லை வாய்ப்புகள் அளித்தும் திருந்த மறுக்கிறார்கள்
என்றாலோ . இஷ்ட்டப்படி விவாகரத்துப் பெற்று குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களை உண்மை அன்புடன் நேசிக்கும் ஒருவர் வந்தால்
குழந்தைகளின் சம்மதத்துடன் கரம்
பிடித்துக் கொள்ளுங்கள்

தற்கால வாழ்க்கை இனிதாக இருக்கிறது
என்றால் இதுபோன்றவர்களின் நட்புகளை தவிர்த்து நிம்மதியாக வாழ்வைத் தொடருங்கள் .

கட்.......

சிறந்த நட்பு நண்பர்கள் என்பவர்கள் ஒருவருடைய வாழ்க்கை சீரழியக் காரணமாகி இடைநிற்கமாட்டார்கள்.

உண்மை அன்புடன் நேசிக்கிறவர்கள்
ஒருநாளும் நன்றாகி இருக்க வாழ்த்தவே செய்வார்கள். ஒதுங்கியிருந்தோ. இல்லை
உடனிருந்தோ ம்.

நிறைய விட்டுக்கொடுத்தல்கள் இருக்கும் உண்மை அன்பில். நேசிக்கிறவங்க நல்லா இருக்கணும் என்ற பிராத்தனைகள் இருக்கும். அந்த அன்பு வாழ்க்கை முன்னேறிச்செல்ல ஒரு பலமா பாலமா இருக்கும். எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் உடனிருப்பார்கள். சேர்ந்து
நடப்பார்கள்.

ஒருப்பெண்ணிற்கு எவ்வளவோ மனக்கசப்புகள் இருக்கலாம். அதனாலவளின் நினைவுகள்
முள் கம்பிகளால் சூழப்பட்டிருக்கலாம்
காதல் இருந்திருக்கலாம். ஏமாற்றம்
இருந்திருக்கலாம். உடனிருக்கப்போகும்
நல்ல ஒரு ஆணாய் அவளை charector assassination செய்துவிடாமல்
அவளில் குடிகொண்ட முள்ளை அகற்றி
முடிந்தால்‌ குடியேறு . உனக்குக் கோயிலகட்டுவாள் பெண்.

அதைவிட்டுவிட்டு குத்திக்கீரி உப்புகண்டம் இடும் சமூகமும் இருக்கு.

"ஒருப்பெண் எதையும் வெளிப்படையாகப் பேசும் கணவன் அமைவது வரம்"

இதப்பத்திப்பேச நிறைய இருக்கு

Let me drop it here.

கட்........

நான் அன்றே சொல்லிருப்பேன் இல்லையா ம் ?

"சில அற்புதங்கள் நம் அருகிலேயே வெகு சாதாரணமாகத்தான் இருக்கும். அவை சாதாரணமாக இருப்பதாலேயே அவை நம் கண்களுக்கு புலப்படாமல் போகின்றன"

சிறந்த காதல் - உன் வாழ்க்கையை விட்டுட்டுவா நா உன்ன காப்பாத்தறேன்னு சொல்லாது. உடனிருந்து உன் வாழ்வு மாற சிறப்பிக்க உறுதுணையாய்ப் பாடுபடும்.
உன் குடும்பம் உடையாமல் பார்த்துக்கும்.
ஒருவரால் உன் குடும்பம் சிதைகிறதென்றால் அது நல்ல அன்போ காதலோ ஏன் நட்போக்கூட இல்லை
என்பதை உறுதி செய்யுங்கள்

நல்ல மனைவி நல்லக் கணவன் அமைந்துவிட்டால்
அதுவும் அற்புதம்தான் இழக்கநேரிடவேண்டாம்.
அருமை உணருங்கள்.

நன்றி

பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராகி (21-Aug-23, 7:57 am)
Tanglish : inbox kelvikal
பார்வை : 28

சிறந்த கட்டுரைகள்

மேலே