அன்பு

Dear Friends

Let us have some coffee break

அன்பு

அன்பு என்பது தனிமையாக்கி விலக்கிவைக்கப்பட்ட ஒரு அன்னையைப் போல் என்பேன்.
எல்லா விதமானப் பிரிவுகளிலும்
அவளுடைய பக்குவம்
ஒரு ஆச்சர்யத்தைக் கொடுக்கும்.
ஒரு நிலைக்கு மேல் அவளை
ஏதேதோ காரணங்களுக்காக
ஒதுக்கி அவள் உணர்வுகள் மகளால் மகனால் ஏளனமாய்ப் பார்க்கப்படுகிறதை உணர்கிறீர்களா ?
மகனுக்கோ மகளுக்கோ
அவர்களுக்கு ஒரு வயதிற்குமேல்
அவர்களுடைய மான அவமானங்கள் பெரிதாகிப் போகின்றன.

முதலில் மகளின் பிரிவை ஏற்கிறாள்
பிறகு மகனின் பிரிவை ஏற்கிறாள்
பின்பொருநாள் முற்றிலுமாய்
கணவனின் பிரிவை ஏற்கிறாள்.
அழுகிறாள்
அழுது முடிக்கிறாள்
தெளிவடைகிறாள்
பின்பு சிரிக்கிறாள்
ஒதுக்கப்பட்ட இடத்திலும்
அருகுகிறாள்
அவமானப்படுகிறாள்
வாழ்ந்து போகிறாள்
இறக்கிறாள் .
அப்படித்தான் தூய அன்பும்
காணாத கண்ணீர்க்கரைகள்
காயலொன்றில்
காய்ந்து நிற்கும் உப்புக்கற்களென.

அன்பு கொண்ட ஒவ்வொருவருக்கும்
பிரிவைப் பற்றிய பக்குவம் இருந்தே தீரணும். Mind ல ஒரு fixed thinking இருக்கணும். எல்லாரும்
எப்பேர்ப்பட்ட உறவாக இருந்தாலும்
வழிதுணைதான் என. அப்போ எப்படிப்பட்ட மெளன இழையோடும்
சூழலையும் பயணங்களையும்
நாம் பழகிக் கொள்ளலாம்

வாழுமிடைக்கு இப்படி எத்தனையோ
பக்குவங்கள் அவசியமிருக்க
ஏன் பிரிதலை ஏற்கமாட்டேன் என்கிறீர்கள்
பேசிவிட்டு காலியாகும் இடங்களில்
மெளனித்திருக்கிறீர்கள் ?

அணுகுகிறவர்களிடம் தூய தாயன்பை
பிரதிபலியுங்கள்

யாரும் வருவதும் இருப்பதும் போவதும்
அன்னைக்கு அதிபழக்கப்பட்டவை தானே

இங்கு ஒவ்வொருவருக்கும் அவரவர்களுடைய கெளரவம்
மேலோங்கி போகிறது.
கொஞ்சம் மனம் அமைதியாய் விட்டுக்கொடுத்து கீழிறங்கி வந்தால்
வாழ்க்கைதான் எவ்வளவு அழகானது ம்

நான் எப்போதோ உங்கள்மேல் உள்ள அன்பின்பால் அன்னை ஆகிவிட்டேன்.
எதிர்ப்பார்த்தல்களுக்கெல்லாம்
அப்பாற்பட்டுவிட்டேன் .
மான அவமானங்களிலிருந்து
விலகிச் சென்றுவிட்டேன்.
சிலவார்த்தை உதிரல்கள்
அதிக மெளனம் என
இன்று என்னால் எல்லா சூழல்களையும்
புன்னகைத்துக் கொண்டே
கடக்க முடிகிறது.
அழுத்தமாய் அறைகூவல் விடுக்கும்
கட்டாயப் பிடிகளிலிருந்து
மாறி நிற்கிறேன்.
பக்குவப்பட்டிருக்கிறேன்.

பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராகி (1-Sep-23, 9:53 am)
Tanglish : anbu
பார்வை : 133

மேலே