அரசு என்ற பழுதுபட்ட எந்திரம்

நேரிசை வெண்பா


அரசு இயந்திரம் ஆட்சியதி காரி
அரசாட டீசலா அல்ல -- சுரந்திடும்
பெட்ரோலா அல்லது பேக்டரிசா ராயமா
கட்டுங்கல் லாமைச்சு காட்டு

காட்டு. = எடுத்துக்காட்டு


அரசு என்பது ஒரு தரமான இயந்திரமே அதுதான்
அரசின் மெத்த படித்த அதிகாரிகள் . அந்த எந்திரம்
ஆடியோட அவர்கள் சொல்லும் டீசலோ அல்லது
பெட்ரோலோ தான் ஊரே வேண்டும்.. கல்லா
கட்டும் சாராய ஆலை மந்திரிகள் அரசு எந்திரம் ஓட
சாராயம்தான் வேண்டும் என்று அதில் சாராயம் ஊற்ற
எந்திரம் அன்றே கெட்டுப் போனது.. கோழி யிட்ட முட்டை
யன்றி கோழியையே வீட்டுக்கு கொண்டு போனார்கள்
ஆனால் அது கொக்கரக்கோ என்று கூவிக் காட்டிக்
கொடுத்து விட்டது, எந்திரத்தில் பயணிப்போர் போதையில்
தள்ளாடித் தவிக்கின்றனர்... இனியும் நின்ற வண்டி ஓடுமா..
அதற்குத் தேவை மெக்கானிக் மற்றும் புதிய உதறி பாகங்கள்.
அப்பவும் கல்லா கட்டும் திருடர் வந்திட அது ஓடுமா ஓடாது நாற்றம்
வீசுமாத் தெரியாது.



...

எழுதியவர் : பழனி ராஜன் (4-Sep-23, 7:34 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 22

மேலே