ஆசிரியர் தினம்

செப்டம்பர் 5ம் தேதி
"ஆசிரியர் தினம்" என்றவுடன்
எந்தன் உள்ளத்திலே
இனம் புரியாத மகிழ்ச்சி

இந்த ஆசிரியர் தின நன்னாளில்
எனக்கு கல்வி போதித்த
ஆசிரியர்களின்
இல்லத்திற்குச் சென்று
அவர்களை வணங்கி
வாழ்த்துக்களைப் பெறுவதில்
பெருமைக் கொள்கிறேன்

மனதிலே உற்சாக அலைகள்
ஆர்ப்பரித்து எழுச்சிக் கொண்டு
பள்ளி பருவத்தை நினைத்துப்
பார்த்து மகிழ்ச்சி கொள்ளுதே

இந்த உற்சாக வெள்ளத்தில்
நீச்சல் அடித்து மகிழ்வதற்கு
என்னுடன் பள்ளியில் படித்த தோழர்களும் இணைந்து
கொள்வது மேலும் சிறப்பாகும்

பள்ளிப் படிப்பை முடித்து,
அரை நூற்றாண்டு காலம்
கடந்துவிட்ட போதிலும்
எழுத்தறிவித்த ஆசான் முன்பு
மாணவனாக நிற்பது மகிழ்ச்சியே

ஆசிரியர்கள் அனைவருக்கும்
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (5-Sep-23, 4:19 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : aasiriyar thinam
பார்வை : 194

மேலே