சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 50

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் - 50
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சங்கரன்கோவிலில் தலத்தில் காசி விசுவநாதர் சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இமயத்தில் சிவெருமானை உதாசீனம் செய்து
பிரம்மன் யாகம் செய்ததை மகள்
பார்வதி யாகத்தை தடுக்க பிராணத்தியாகம் செய்ய
பார்வதி தேவி உடலைச் சிவபெருமான்
தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் ஓட

பார்த்தப் பெருமாள் சக்ராயுதத்தை ஏவி
பார்வதி தேவி உடலை பாகங்களாக பிரித்து
ஒவ்வொருப் பாகமும் வெவ்வேறுப் பகுதிகளில் விழுந்திட
ஆவேசம் குறைந்த சிவபெருமான் மீதமுள்ள
தேவியின் உடலை மகாமயானமானக் காசிக்கு
கொண்டு வந்து அக்னியில் இடமுனைந்தார்

பார்வதி தேவியின் காதின் அருகில்
தாரக மந்திரம் உபதேசம் செய்திட்ட
வேளையில் கண்டிட்டார் காதின் காதணி இல்லாததை
எங்கோ காதணி விழுந்தை உணர்ந்தார்

திருமால் சக்கரத்தால் தீர்த்தக்கிணறு அமைத்து
சிவனை நோக்கித் தவமிருக்க
சிவன் திருமாலை அனுகி
தேவியின் காதணிப் பற்றி கேட்க
திருமால் கிணற்றைக் காட்ட
சிவபெருமான் கிணற்றை தலைநீட்டி
உற்றுப்பார்க்க அவர் காதில் இருந்த
குண்டலம் கிணற்றில் விழுந்து பிரகாசமான
பேரோளியுடன் சிவலிங்கம் வெளிப்பட
சிவலிங்கத்தில் உமையவள் சக்தியும் உறைந்திருக்க

திருமால் சிவலிங்கத்தினை அவ்விடம் பிரதிஷ்டை செய்து
சிவபெருமானை நோக்கி மீன்டும் தவமிருக்க
சிவபெருமான் விசுவரூபமாக திருமால் முன் தோன்றி
திருமாலே வேண்டும் வரம் கேள் என்க
பிரதிஷ்டைச் செய்த ஜோதிலிங்கத்திலிருந்து மக்களை எப்போதும் ஆசிர்வதிக்க வேண்டுமென்றும்
ஜடாமுடியில் இருக்கும் கங்கையில் இத்தலம்
வந்து நீராடினால் பாவத்தை போக்க வேண்டுமென்றும்
சிரார்த்தம் செய்தால் புனிதம் அடைந்து
சொர்க்கம் அடைய வேண்டுமென வரம்
கேட்டிட வரம் தந்து ஒளியாகச்
சிவலிங்கத்தில் ஐக்கியமாகி அருள்பலிக்கின்றனர்

திருமால் முன் விசுவரூபமாக காட்சித்
தந்ததால் சிவலிங்கம் விசுவநாதர் ஆனார்
பார்வதி தேவி விசாலாட்சியாக அருள்புரிகின்றார்

காசியில் உள்ள விசுவநாதர்
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில் தலம் வந்து
சங்கரலிங்கரை வணங்கிட வருபவர்களின்
பாவம் போக்கிட காசி விசுவநாதர்
வடப்பக்கம் அமர்ந்து அருள்புரிகிறார்.......

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (4-Sep-23, 8:25 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 5

மேலே