நடத்துநர்
நடத்துநர்
○○○○○
சில்லறை சிரிப்பை முகத்தில் வைத்து
சினத்தை பணத்துடன் கைப்பையில் வைத்து
ஏறுவோர் இறங்குபவர்மீது இரக்கம் வைத்து
ஏறமுடியாத பெரியவரை தூக்கி ஏற்றி
பிள்ளைகள் போல் பாதுகாத்து இறக்கிவிட்டு
பள்ளி பிள்ளைகளின் படிகட்டு பயணத்தை
பக்குவமாக விளைவுகளை எடுத்து கூறி
பள்ளிகளில் எந்த அசம்பாவிதமும்யின்றி இறக்கிடுவார்
பயணத்தின் போது தூங்கும் சோம்பேறிகளை
பண்பாய் தட்டி எழுப்பி சுறுசுறுப்பாக
பயணத்தை முடித்து ஊர் திரும்பச்செய்வார்
முகவரி தெரியாத பளணிகளுக்கு சேரவேண்டிய
முகவரியில் பாதுகாப்பாக இறக்கி விடுவார்.