சனாதனமும் சனியன்களும்

கலிவிருத்தம்

புளிமா. கூவிளங்காய் புளிமாங்கனி. கூவிளங்காய்


சனாத னத்தைமொத்த சனியங்களு மொன்றுசேர்ந்து
கனாவில் பார்த்தசனா தனம்நீக்கென கொக்கறிக்கும்
சனாத னமென்பதென் சனியேயதன் றைச்சட்டம்
விநோதம் நீக்கியப்பின் விடுத்தப்புது சட்டமிப்போ

சனியே ஆதி அரசர் அன்று
சமைத்த ஸ்மிரிதி என்ற சட்டங்கள்
பதினெட்டாம் அதுவும் ஆயிரம் ஆண்டுக்கு
முன்னே செத்துப் போனது துருக்கன்
வந்தான் ஆப்கன் வந்தான் களப்பிரர்
வந்தார் பின்னே வந்த வெள்ளை
தந்த சட்ட மிங்கே நடக்குது
மனுவின் ஸ்மிருதி இங்கில்லை உண்மை
அனைத்து செல்லும் அம்பேத்கர் கொடுத்த
அரசியல் அமைப்புச் சட்டம்
அழகாய் ஆட்சியில் இருப்பது தெரியாதோ


(சனாதன மென்பது அன்றைய சட்டம் அது இன்றில்லை )


குறள் வெண்பா


இல்லா சனாதன மிங்கெதற்கு பேசுவர்
பொல்லா சனியனேப் போ


....

எழுதியவர் : பழனி ராஜன் (13-Sep-23, 1:43 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 74

மேலே