குறுகுறுன்னு பார்க்குறியே கண்ணம்மா - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(காய் 4)
(1, 3 சீர்களில் மோனை)
குறுகுறுன்னு பார்க்குறியே கூந்தல்சடைக் கண்ணம்மா;
விறுவிறுப்பாய்ப் தோப்பினிலே விரைவதுமே ஏனம்மா?
அறக்கருணை யென்மீதில் ஆசையுடன் வையம்மா;
அறத்துணைவி நீயென்பே னாணையுன்மேற் றானம்மா!
- வ.க.கன்னியப்பன்