என் மனதில்
என் மனதில். என் மனதில்
அவள் ஒரு அழகி,
திரை உலகை (50 - 60ல்)
அலங்கரித்த அழகி.
அவளுடைய படங்களில்
கத்திக் குத்து இல்லை,
சண்டைகள் இல்லை.
பாடல்கள் எல்லாம்
" இன்பமான இரவிதுவே...."
போன்ற தெவிட்டாத தேனமுதம்.
அவள் கண்கள்
ஒரு காந்தம்,
அவள் புன்னகை
ஒரு மயக்க மாத்திரை,
அவள் முடி என்னை
கட்டி இழுக்கும் கயிறு.
அவள் அழகோ என்னை
ஒரு ஓவியன் ஆக்கிவிடும்,
என் மனதின் இந்த அழியா
அஜந்தா ஓவியம் யார்?
இந்திய காவியத்தில்
இரு நதிகள்
"கங்கை - ஜமுனா"
இதில் ஒன்றை அவளுக்கு
சூட்டி மகிழுங்கள்
மர்மம் நீங்கிவிடும்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.