சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் பகுதி - 66

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் : பகுதி - 66
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கன்மாடன் முக்தி பெற்ற சங்கரன்கோவில் தலச் சிறப்பு :- பாகம் : 1
●●●●●●●●●●●●●●●●●●●●
சேற்றூர் பக்கம்
சிற்றாறு தேவியாற்றங்கரையில்
சிவபக்தாரான முனிவர்
சிவராதன் தவமிருக்க

சிவராதன் மகனான
செல்வன் கன்மாடன்
சமித்து எடுத்து
சிற்றாற்றுக் கரையில்

சிறுநடையாக வந்திட
சிறுகரை எதிரே
சிறு பசு வந்திட
சினமுற்று அப்பசுவை

சேற்றினுள் தள்ளிட
சிறுப் பசு மாண்டிட
சிறு அச்சத்துடன்
சிரம் பொழிந்த

சரீரம் கண்ட
சிவராதன் முனிவர்
செல்வனிடம் நடந்ததை
சொல் பயம்
சிறிது வேண்டாம் என்க

சொன்னான் நடந்ததை
செல்வன் கன்மாடன்
சிவராதன் பயந்து
சிவத் தொண்டர்
சபையோரிடம் பசுக்கொலை
செய்தால் குற்றமென்ன வினவ

சபையோர் பசுக்கொலை
செய்வதுக் கொடியக்குற்றம்
செய்தோர் குலத்தோர்
செய்வினையால் இருபத்தொருபேர்
சேர்வர் நகரத்தில் என்க
(சமித்து : ஹோமக் குச்சிகள்)

பாகம் : 2 நாளை தொடரும்

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (22-Sep-23, 5:42 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 15

மேலே