சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் பகுதி - 65

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் : பகுதி - 65
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கானவன் வீடு பெற்ற சங்கரன்கோவில் தலச் சிறப்பு
●●●●●●●●●●●●●●●●●●●
வானமாக விரிந்து
வளமிக்க நிலத்தில்
வேடர் குலத்தவள்
வயிற்றில் பிறந்த
வேடனானக் கானவன்

வேளாண் நிலத்தில்
விளைந்த நெல்
வளைந்து நயனமிடும்
வைப்பாற்று நதிக்கரையில்

வயல் எலியை
வளைத்துப் பிடிக்க
வயலில் குழிதோண்ட
வந்தது புதையல்

வரமானப் புதையலை
வீட்டில் பதுக்கி
வேடனென்பதை மறந்து
வேலையைத் துறந்து

வக்கிரக் காமத்தால்
வரமான புதையலெல்லாம்
வளம் குன்ற
வாட்டியது தரித்திரம்

விறகு விற்பதே
வேடனவன் குலத்தொழில்
விறகு விற்க
வந்தான் புன்னைவனம்

விறகு விலையற்று
வயிற்றுப் பசியால்
வனத்தின் நாகசுனையின்
வற்றா நீரினை

வந்துப் பருகிடும்
வேளையில் மயங்கினான்
வழியோர் மயங்கிய
வேடனைக் கண்டவுடன்

வனத்தின் நாகசுனையின்
வற்றா நீர்யெடுத்து
வந்தவர்கள் முகத்தில்
விரைவாகத் தெளிக்க
வேடன் இறந்திருந்தான்

வனத்தில் தங்கியதாலும்
வற்றா நாகசுனைநீர்
வேடன்மீது தெளித்ததாலும்
வனத்தில் இறந்ததாலும்
வீடுபேறு அடைந்தான்
வேடனான கானவன்

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (21-Sep-23, 6:35 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 8

மேலே