சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் பகுதி - 64

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் : பகுதி - 64
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~தக்கணை மோட்சம் பெற்ற சங்கரன்கோவில் தலச் சிறப்பு பாகம் : 2
●●●●●●●●●●●●●●●●●●●
புலவர் ஒருவன் கிளிபோன்ற மனைவியை
புறந்தள்ளிக் குரங்கினைப் போல் மனம்தாவி
காமம் முற்றிக் கணிகையர் பலருடன்
களிப்புக் கொண்டமையால் தீண்டியத் தீவினையால்
மறுபிறப்பில் தக்கணையெனும் பெண்ணாகப் பிறந்து

பெண் முயலும் ஆண் முயலும்
பாசத்தால் வீதியில் விளையாடியப் போது
ஆண் முயலைக் கொன்றத் தீவினையால்
அடுத்தப் பிறவியில் சத்யகீர்த்தியாகப் பிறந்து

தக்கணையும் சத்யகீர்த்தியும் மணம்முடிந்து சிலநாளில்
தீவினைகள் இருவரையும் விடாது துரத்த
சத்தியமூர்த்தி இளமையில் இறந்திட
தக்கணை இளமையில் விதவையானள்

பாகம் : 2

தக்கணை சத்யகீர்த்தியை இழந்து வருந்தி
தன்னிலை மறந்து அழுதுப் புலம்பியவளை
காசிப முனிவர் கண்டு உணர்ந்து
கண் கலங்காதே பெண்ணே ! இப்பிறப்பின்றி ஏழு பிறப்பு அடைவாய்யென
முனிவர் தக்கணையிடம் உரைக்க

மழை நீர்ப் பட்டவுடன் தளிரும்
மணலில் புதைந்த விதையாக
தக்கணை மயக்கம் நீங்கி எழுந்து
தீர்த்தம் பல சென்று நீராடியும்
மனத்தெளிவு அடையாது புன்னைவனம் அடைந்தாள்

சங்கரன்கோவில் வந்து கால் பதிக்க
சங்கடங்கள் யாவும் பறந்தோடி
மன இருள் நீங்கி
மனதில் தெளிவடைந்து நாகசுனையில் நீராடி
மரஉரி விபூதி தரித்து
பஞ்சாட்சரம் ஜெபம் செய்து
புன்னைவனத்தில் தவம் கொண்டவள்

கனவில் சங்கரலிங்கர் தோன்றி
பிறப்புக்கு ஒரு பிள்ளைப் பெற்று
ஏழாவது பிறப்பில் ஏழு புத்திரரைப்
பெற்ற பின் சங்கை வந்து
உயர்ந்தக் கைலாயப் பதவி பெறுவாய்யெனக் கூற
கேட்ட தக்கணை உயிர் துறந்தாள்

முக்தியைத் தருவது ஞானம் (கருமம்)
ஞானம் தருவது மோட்சம்
கற்புடையப் பெண்கள்
கணவருக்கு பணிவிடை
செய்யும் சற்கருமத்தைச்
செய்ய மறந்த தக்கணை
மோட்சம் பெற இயலாத தக்கணை

ஏழு பிறவியெடுத்து
ஏழு புதல்வனைப் பெற்று
சங்கரன்கோவில் வந்து
சஙகரலிங்கரை வணங்கிட
கைலாயத்தில் பதவி அடைந்தாள்.....

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (20-Sep-23, 6:18 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 6

மேலே