சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் பகுதி - 63

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் : பகுதி - 63
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~தக்கணை மோட்சம் பெற்ற தலச் சிறப்பு பாகம் : 1
●●●●●●●●●●●●●●●●●●●

கதிரவன் செங்கதிரை மன்மதன் அம்பாக
கமலத்தின் மொட்டினில் பாய்த்திட
விரிந்து மலர்ந்து அழகூட்டும் தடகங்கள்
வளைந்தோடும் ஆறும் கொண்ட பிரம்மபுரத்தில்

வேதங்கள் பலக்கற்று அதன்படி நடக்கும்
விஷ்ணு சர்மனுக்கு தக்கணையெனும் புதல்வி
பாற்கடலிலும் கடைந்தும் கிடைத்திட தேன்அமிர்த
பேரழகு நிறங் கொண்ட பெண்ணவளை

புஷ்கரசர்மன் புதல்வன் சத்யகீர்த்தி என்பவனுக்கு
தக்கணையை வேத சாஸ்திரப்படி மணமுடித்து
இல்லற வாழ்வை இனிமையாக தொடங்கிய
இர்ஐந்து நாளில் சத்யகீர்த்தி இறந்திட

இளம் விதவையாக தக்கணையைப் பார்த்திட
இயலாத முனிவர்கள் காரணம் கண்டறிய
அத முனிவரிடம் அவளைப்பற்றி கேட்டிட
அப்பெண்ணின் பூர்வஜென்மத்தை எடுத்து உரைத்தார்

இவ்வாறு

பூர்வ ஜென்மத்தில் தக்கணை கவித்துவமும் பதிதாண்ட
பத்தினியானக் கற்படைய இல்லாளைத் தவிர்த்து
காமம் தலைக்கேறிக் கணிகையுடன் தடம்மாற
கற்புக்கரசியைக் கைவிட்டதால் தீவினைகள் கைப்பற்ற
இப்பிறவில் பெண்ணாகி விதவையானள் தக்கணை

முற்பிறவியில் சத்யகீர்த்தி

தேவன் ஒருவன் அவனும் மனைவியும்
முயல் உருவில் விளையாடியப் போது
மாமிசம் வேண்டி ஆண் முயலை
மரணிக்கச் சத்யகீர்த்தியை தீவினைத் தீண்டி

முற்பிறவி வினையால் இப்பிறவியில்
இளமையில் சத்யகீர்த்தி இறந்தான் ....

பாகம் : 2 நாளை தொடரும்......

சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் தொடரும்....

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (20-Sep-23, 6:10 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 14

மேலே