மருத்துவ ஊழியன்
மருத்துவ ஊழியன்
++++++++++++++++
வருவோரின்
வாதட்டாமே மருத்துவ
ஊழியர்களைக் கோபத்திற்கு
வழி வகுக்கிறது
பணிச் செய்வோரை
பணியிடைச் செய்யாதீர்
பொதுப் பணியில்
பெற்றப் பிள்ளைகளைக்கூட
பாராதுப் பிணிதீர்க்க
பகல் இரவு
பாராது தொடர்ந்து
பணிச் செய்கிறோம்
மருத்துவப் பணியாளர்கள்
மருத்துவம் செய்திட
மருத்துவமனைக்கு வருவோர்க்கு
மகனாக மகளாக
மருமகள்களாக பணி செய்கின்றோம்
பெற்றத் தந்தைத் தாயரைப்
பார்த்து பல மாதங்கள்
பாரதிருந்து உங்களை அவர்களைப்
போல் பாவித்து பார்க்கிறோம்
எங்களைத் தெய்வமாக
ஏறெடுக்க வேண்டாம்
எங்களைத் தூற்றாதீர்
எமனிடம் போராடும்
எங்களை!
என்றும் மக்கள் நல மருத்துவப் பணியில்
இரண்டாம் தலைமுறை கண்ட
உங்கள்
சமத்துவப் புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்