தன்னம்பிக்கை கொள்

தன்னம்பிக்கை கொள் !!
👍👍👍👍👍👍👍👍👍

தன்னம்பிக்கைக் கொள்தம்பி
தாரணியும் உன்வசமே/

உன்வசமே வெற்றிகளும்
உலகமெலாம் வியந்திடுமே /

வியந்திடுமே சுற்றமெலாம்
வியர்வையின் பெருமையினால் /

பெருமையினால் பிறக்கின்ற
தலைக்கனம் துறந்துவிடு /

துறந்துவிடு சோம்பலைத்
தூக்கத்தை மனச்சோர்வை /

மனச்சோர்வை அகற்றியே
மகிழ்ச்சியை மலர்ந்திடச்செய்/

மலர்ந்திடச்செய் அன்பினை
மனத்திலும் முகத்திலும் /

முகத்திலும் அகத்திலும்
அருள்நிறைய உதவிடுவாய் /

உதவிடுவாய் ஊருக்கெலாம்
ஓயாமல் வாழும்வரை /

வாழும்வரை தளராமல்
தன்னம்பிக்கைக் கொள்!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (24-Sep-23, 8:28 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 54

மேலே