இருளே விலகிடு

இருளே விலகிடு !
🌕🌕🌕🌕🌕🌕🌕

இருளே விலகிடு
இன்னொளி
வழங்கிடு /

வழங்கிடு வள்ளலாய்
வழியெலாம்
தீபமே /

தீபமே ஏற்றிடும்
தீரனாய்
மாறுவாய் /

மாறுவாய் மானுடா
மண்பதைக்
காக்கவே /

காக்கவே பிறந்தவன்
கலங்கிட
வேண்டாமே /

வேண்டாமே வீணான
ஒளியிலா
நாட்களே /

நாட்களே நன்மைகள்
நல்கிடும்
வாய்ப்புகள் /

வாய்ப்புகள் வந்திட
வாழ்வெலாம்
ஒளிமயம் !!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (24-Sep-23, 8:35 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 47

மேலே