தர்மம் தலைகாக்கும்

தர்மம் தலைகாக்கும்
[][][][][][][][][][][][][][][][][][][][]

கோடியில் புரண்டாலும் கோமணம்கூட கூடவராது //
கொள்கையாக வகுத்திடு தர்மம் செய்திட //

பசியென்று வந்தவருக்கு புசிக்க உணவுகொடு //
பகிர்ந்த உண்ண பழகி கொள் //

உயிர் உள்ளவரை குருதி தானம் செய் //
உயிரற்றநிலையில் உடலை தானம் செய் //

வருங்கால சந்ததிக்கு பணத்தை சேர்த்து //
வரவு வைக்காதே பாவத்தை -மாறாக //

உதவி தான தர்மம் செய்து //
உன் வாரிசுக்கு புண்ணியம் சேர்த்திடு //

தர்மங்கள் செய்து வீழ்ந்தாலும் அது //
தக்க வேளையில்
தர்மம் தலைகாக்கும் //

சமத்துவ புறா ஞான. அ.பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (22-Sep-23, 5:49 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 253

மேலே