தொட்டு விடும் தூரம்

தொட்டு விடும் தூரம்
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

நிலவை தொட்டு விடலாம் முயற்சியுடன்
நீண்ட உறவுகளுக்குள் ஒற்றுமை யாக இருந்தால்

இருள்சூழம் வேளையில் சோர்ந்து விடாதே
இருட்டை விரட்டி தன்னம்பிக்கை விதைத்து

தொடர் வண்டி தண்டவாளத்தில் நடைபழகு
தோகை விரிக்கும் பறவை போல்

மேல் எழுந்து முயற்சியில் வெற்றிபெற்று
மேகங்கள் மறைத்திருக்கும் நிலவை தொடலாம்

லக்கினத்தை நம்பி இருந்து விடாதே
லட்சியத்துடன் முயற்சி செய்தால் வெற்றிநிச்சியம்

எல்லாம் உன் மூன்றாம் (நம்பிக்)கையில்
எல்லாம் தொட்டு விடும் தூரம்தான்.... /

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (22-Sep-23, 5:46 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 136

மேலே