பூட்டில் விதை

பூட்டில் விதை
[][][][][][][][][][][][]

பூட்டில் சிக்கிய
பயிரின் விதை
முயன்றதால் இரும்பையும்
மண்ணாக்கி உரமாக்கி

துளிர் விடும்
தாவர விதைகளின்
தன்னம்பிக்கை துணிச்சல்
உணக்குல் இருந்தால்

விதையாகத் தளிர்
வாழ்ந்திட முயல்
வெற்றியால் திறக்கும்
வளர்ச்சியின் கதவு

கடமையுடன் உழைத்தால்
கடலும் கையளவு
கழுகாக முயன்றால்
கருமேகம் தொட்டிடலாம்

பூட்டில் சிக்கிய
வீழும் விதையாக
முயலாமல் வீழாதே !
துளிரும் விதையாக
முயன்று வென்றிடு !!

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (22-Sep-23, 5:44 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 46

மேலே