சிகரம் அடைந்திடு
சிகரம் அடைந்திடு
@@@@@@@@@
சிகரம் அடைதலே
சீர்மிகு இலக்கு /
நிகழும் காலமும்
நின்னிரு கரங்களில் /
தெளிந்த திட்டமும்
திகைத்திடா முயற்சியும் /
நெளிந்ததோர்ப் பாதையை
நேராக்கி வெல்லுமே /
கடினமாய் உழைத்திடு
கலங்கிடா நெஞ்சமே/
வடிவொடு வெற்றியின்
வாகையைச் சூடவே /
ஊரொடும் உறவொடும்
உவப்பொடு வாழ்ந்திடின் /
பேரொடும் புகழொடும்
பெருமையும் உயருமே !!
-யாதுமறியான்.