திறமைக்கு முதலிடம்
ஆளில்லாக் கட்சியின் அரசியல் விளம்பரம்
############################
திறமைக்கு முதலிடம் தரும் அரிய வாய்ப்பு.
திறமையான இளைஞர்கள், நடுத்தர வயதினருக்கு வேண்டுகோள். உங்களால் புதுமையான வகையில் பொய் தகவல்களை பேசி, வதந்திகளைப் பரப்பி எங்கள் கட்சியின் வளர்ச்சிக்கு உதவ முடியுமா? குற்றச் செயல்களில் ஈடுபட்டு பிரபலமாய் இருக்கும் நபர்களுக்கு கட்சியில் சேர்ந்தவுடன் பதவி வழங்கப்படும். உங்கள் திறமைகளைக் கான் சான்றுகளுடன் எங்கள் கட்சியின் தலைமை நிலைய நிர்வாகியை அணுகவும். 24x7 கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவர். கட்சியில் சேர்ந்த நாளிலிருந்து உங்கள் தேவைகள் அனைத்தையும் கட்சி கவனித்துக் கொள்ளும். வாருங்கள். வாருங்கள். வளமான ஆட்சியை அமைப்போம்.
ஆ.பு.க தலைமை நிலையம்.