கலைந்து போன கரு
கலைந்து போன கரு
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
கலைந்து போனகருவாக கனவை கலையாதே /
கனவுகள் கண்டு முயற்சி கொண்டு /
ஏழ்மை நீங்கிட வறுமை ஒழித்திட /
ஏறிவிடு வறுமைகோட்டை தாண்டும் ஏணியில் /
கனவால் வென்றவர் கலாம்-கனவுகள் /
கண்டு உன்னையும் முன்னேற சொன்னார் /
இரவுக்காக காத்திருக்கும் நிலவைப்போல் இருந்துவிடாமல் /
இன்றே செய் நன்றே செய் /
தோல்விகள் கண்டு துவண்டு விடாதே /
தோல்விதான் வெற்றியின் முதல் படி /
முயற்சி செய் பயிற்சி செய் /
முன்னேற்றத்தில் கால் பதித்து வெற்றிகொள்/
சமத்துவ புறா ஞான. அ.பாக்கியராஜ்