சொன்னதையே சொல்லுதடி

சொன்னதையே சொல்லுதடி
23/10/23
அடங்கா உன் இளமை கண்டு நான்
அடங்கித்தான் போனேனடி...
தொடங்கா மல் என்தமிழும் உன் பருவம் கண்டு
மடங்கித்தான் போனதடி....
முடங்காது என் நினைவும் உன்முகம் காண
அடங்காது அலையுதடி...
அழியும் இம்மேனி. அழியாது உன் இளமையென பொய்
மொழியும் பேசுதடி....
சுழிக்கும் உன் நுனி மூக்கைத் திருகிய - மா
பழியும் விழுந்ததடி
என்னத்தான் செய்வது? பித்துப் பிடித்து மனம்
சொன்னதையே சொல்லுதடி

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (23-Oct-23, 8:11 am)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 71

மேலே