தினமும் சிரிக்கிறேன்

நினைத்து நினைத்து சிரிக்கிறேன்
நினைவிழந்த காலத்தை எண்ணி

உன் வார்த்தைகளின் விஷத்தை உணராமல்
வேதமாய் வாழ்ந்த காலத்தை எண்ணி சிரிக்கிறேன்

உன் பார்வையின் பாதளத்தை அறியாமல்
வாழ்க்கை பாதையை தொலைத்ததை எண்ணி சிரிக்கிறேன்

கண்ணீரால் என் உள்ளத்தை கலக்கி
காரியங்களை சாதித்த உன்னை நினைத்தும்
என் மடமையை நினைத்தும் சிரிக்கிறேன்

உன் உள்ளம் உடைந்துவிடுமோ என்று
எண்ணி எண்ணி செய்த செயல்களை
ஒரே வார்த்தையில் உதறிவிட்டாய்....
(என்னை மறந்துவிடு)

அதை நினைத்து நினைத்து தினமும் சிரிக்கிறேன்

பின் குறிப்பு:
காதல் கரையான் போன்றது
கல்லறை செல்லும் வரை யாரையும் விடாது...

எழுதியவர் : ஜோ. பிரான்சிஸ் (16-Oct-11, 12:24 pm)
பார்வை : 401

மேலே